கொரோனா பேரலையால் உலகெங்கும் உள்ள மக்கள் கடும் துன்பத்தில் உழல்கின்றனர். கடந்த 2019ம் ஆண்டு துவங்கிய இந்த மோசமான கொரோனா தொற்று உலக மக்களை பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைய வைத்து மிக மோசமாக ஆக்கி விட்டது.
சில மாதங்களாக இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் உலகிலேயே முதல் முறையாக கியூபா நாட்டில் 2 வயது குழந்தைக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
வரும் டிசம்பர் மாதங்களில் பள்ளிகள் திறக்க இருப்பதால் அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி அங்கு ஜரூராக நடைபெற்று வருகிறது.













