---Advertisement---

வயிற்றெரிச்சல் புடிச்சவங்க… தமிழக கல்வி முறையை குத்தம் சொல்றாங்க… உதயநிதி ஸ்டாலின் பேட்டி…!

By Sri
Published on: September 5, 2024
---Advertisement---

வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள் தமிழக கல்வி முறையை குறை கூறி வருகிறார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் ரவியை சுட்டிக்காட்டி பேசி இருக்கின்றார்.

சென்னை மறைமலை நகரில் நடைபெற்ற திமுக நிர்வாகி திருமண விழாவில் விளையாட்டு துறை அமைச்சரும், இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதையடுத்து பேசியவர் கூறியதாவது “இந்தியாவிலேயே மிக சிறந்த கல்வி முறை ஒன்று இருக்கிறது என்றால் அது தமிழகத்தில் மட்டும் தான்.

தமிழக பாடத்திட்டத்தில் படித்தவர்கள் இன்று பல்வேறு தளங்களில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். தமிழக பாடதிட்டத்தில் படித்தவர்கள் விஞ்ஞானிகள் ஆகவும் மிகப்பெரிய மருத்துவர்களாகவும் இருக்கிறார்கள். சில வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள் இதை ஏற்க முடியாமல் தான் மாநில அரசின் கொள்கையின் மீது குற்றம் கூறுகிறார்கள்.

ஆசிரியர் பணி அறிவார்ந்த தலைமுறையை உருவாக்கும் பணி. தமிழக பாடத்திட்டத்தை யார் குறை கூறினாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாடு பாடத்திட்டது முறையை குறை கூறினால் அது தமிழக ஆசிரியர்கள் மாணவர்களை அவமதிப்பதற்கு ஒப்பாகும். மாணவர்களை சுயமாக சிந்தித்து செயல்பட தூண்டுவதுதான் சிறந்த கல்வி முறை.

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் பயில்பவர்கள் தான் வருங்காலத்திலும் சிறந்து விளங்குவார்கள் என்று உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். தமிழக கல்விமுறையின் தரம் மோசமாக இருப்பதாக ஆளுநர் ஆர் என் ரவி பேசியிருந்த நிலையில் அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்து இருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Conceptual graphic representing the exciting new film starring Varun Tej and produced by Karthik Subbaraj.

வருண் தேஜ் – கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி: புதிய படத்தில் இணையும் மாஸ் காம்போ – இசையமைக்கும் சாய் அபியங்கர்!

Concept graphic highlighting blockbuster actress Preity Mukhundhan's journey into Kollywood with her parents' support.

நடிக்க என்னைத் தூண்டியது என் பெற்றோர்தான்: பிளாக்பஸ்டர் நாயகி பிரீதி முகுந்தன் ஓபன் டாக்!

Conceptual graphic representing the exciting collaboration between director Mohan Raja and actor Karthi.

எம்.குமரன் மற்றும் தனி ஒருவன் கலவை: கார்த்தி ஜோடிக்கும் மோகன் ராஜா – அதிகாரப்பூர்வமாக வெளியான செம மாஸ் அப்டேட்!

Conceptual graphic representing the collaboration between actor Vishal and director RS Durai Senthilkumar for 7 Screen Studio.

விஷாலின் புதிய படம் குறித்து லேட்டஸ்ட் தகவல்: லலித் குமார் உதவியால் மீண்டும் இணையும் கூட்டணி – இயக்கவிருக்கும் பிரபல இயக்குநர்!

Concept graphic celebrating Maestro Ilaiyaraaja's soulful composition of the Muthumani song for Dorothy.

இளையராஜாவின் மேஜிக் ஹார்மோனியம்: ‘டொரா தி’ படத்தின் ‘முத்துமணி’ பாடல் குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட படக்குழு!

Official release date announcement poster for Fahadh Faasil's Don't Trouble The Trouble.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஃபஹத் பாசிலின் ‘டொண்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ புதிய ரிலீஸ் தேதி வெளியீடு!