---Advertisement---

துணை முதல்வர் ஆகிறாரா உதயநிதி ஸ்டாலின்…? வெளியான முக்கிய தகவல்…!

By Sri
Published on: September 18, 2024
---Advertisement---

தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் வரவுள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்பட இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல் வெளியாகி வருகின்றது. மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சராக பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது. உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனால் மகிழ்ச்சி அடைவோம் என்று ஏற்கனவே மூத்த அமைச்சர்கள் பலரும் கூறி வந்தார்கள்.

ஆனால் அது இன்னும் உறுதிப்படுத்தாமல் இருந்து வருகின்றது. அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு வந்த முதல்வர் மு க ஸ்டாலின் தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. ஆனால் அது உறுதியாக நடக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.