---Advertisement---

கொரோனாவால் 12 பேர் இறந்துவிட்டார்கள் – வாட்ஸ் ஆப்பில் வதந்தியால் பரபரப்பு !

By Sri
Published on: March 21, 2020
---Advertisement---

சென்னையில் கொரோனா வைரஸ் பரவலால் 12 பேர் இறந்துவிட்டதாக வெளியான செய்தியால் பீதி ஏற்பட்டது.

கொரோனா வைரஸ் பரவலால் இந்தியாவில் இதுவரை 203க்கும் மேற்பட்டோர் பாதிக்க பட்டுள்ளனர். மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கொண்டு வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி மக்கள் நாளை தங்களை வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில் ’கொரோனா வைரஸால் 12 பேர் இறந்துள்ளனர். அதனால் பொதுமக்கள் போராட்டம் நடத்த உள்ளனர்’ என சமூக வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தி பல்வேறு குழுக்களில் பரவியது. இது பீதியை உண்டாக்கியதால் அடுத்து போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு அந்த வதந்தியைப் பரப்பியவர்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் இருவரும் காட்டுபாக்கம் பகுதியைச் சேர்ந்த பெஞ்ஜமின் மற்றும் சிவகுமார் எனத் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் தங்கள் வேலை செய்யும் கார் கம்பெனியில் விடுமுறை அளிக்காததால் இப்படி செய்ததாக கூறியுள்ளனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.