---Advertisement---

பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதிய நம் சென்னையை கொண்டாடுவோம்… மு க ஸ்டாலின்…!

By Sri
Published on: August 22, 2024
---Advertisement---

தமிழகத்தின் தலைநகராக பறந்து விரிந்து இருக்கும் சென்னை நகருக்கு இன்று 385 ஆவது பிறந்தநாள். சென்னை நகரம் உருவாகி இன்றுடன் 385 ஆண்டுகள் ஆகிவிட்டது. சென்னை தினத்தை கொண்டாடும் பழக்கம் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தொடங்கியது. அதன் பிறகு ஆண்டுக்கு ஆண்டு சென்னை தினம் கொண்டாட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

வந்தாரை வாழவைக்கும் நகரம் சென்னை. மெட்ராஸ் மாகாணம் என அழைக்கப்பட்டு வந்த தமிழகம் 1969 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதே போல தலைநகரமாக திகழ்ந்த மெட்ராஸ் 1996 ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை தினத்தை முன்னிட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது “சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதனின் உயிராகவும் உள்ளது. வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தத்தை வழங்கிடவா என்று தன் மடியோடு ஏந்தி கொண்ட தாய் சென்னை.. இந்த தர்மமிகு சென்னையே நமது சமத்துவபுரம்.. பல கனவுகளை வெற்றி கதைகளாக எழுதிய எழுதும் நம் சென்னையை கொண்டாடுவோம்” என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.