---Advertisement---

சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சுக்கு மாறும் தேனி மாவட்டம்! மகிழ்ச்சியில் மக்கள்!

By Sri
Published on: April 28, 2020
---Advertisement---

சிவப்பு மண்டலத்தில் இருந்த தேனி மாவட்டம் கடந்த ஒரு வாரமாக புதிய நோயாளிகள் இல்லாததால் ஆரஞ்சு மண்டலத்துக்கு மாற்றப்பட உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை அதன் பாதிப்புக்கு ஏற்றவாறு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை ஆகிய மண்டலங்களாக பிரிக்கப்பட்டன. தமிழகத்தில் கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்த மாநிலங்களில் தேனியும் ஒன்றாக இருந்தது. அதனால் அந்த மாவட்டம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அங்கு மொத்தமாக 43 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் தேனி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சையில் இதுவரை 35 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழக்க, தற்போது 7 பேர் வரை சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக அங்கு கடந்த ஒரு வாரமாக புதிதாக ஒரு நோயாளி கூட அனுமதிக்கப்படவில்லை. இதனால் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.