---Advertisement---

ரத்தம் சொட்ட சொட்ட கத்தி மற்றும் காயங்களுடன்… மருத்துவமனைக்கு வந்த வாலிபர்… அதிர்ச்சி சம்பவம்…!

By Sri
Published on: October 8, 2024
---Advertisement---

கையில் ரத்தம் சொட்ட சொட்ட கத்தி காயத்துடன் வாலிபர் மருத்துவமனைக்கு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகில் முத்துப்பட்டினம் பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கு சிவபாண்டியன், பிரகதீஸ்வரன் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். சிவபாண்டியனுக்கும் பிரகதீஸ்வரனுக்கும் இடையே பூர்வீக சொத்து காரணமாக சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரகதீஸ்வரன் அண்ணன் சிவப்பாண்டியன் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து பட்டாக்கத்தியால் தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி இருக்கின்றார். இதில் பலத்த காயமடைந்த சிவபாண்டியன் அந்த சூழ்நிலையிலும் தம்பியின் கையில் இருக்கும் பட்டாக்கத்தியை பறித்து இருக்கின்றார்.

பின்னர் பிரகதீஸ்வரர் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து சென்று விட்டார்கள். பலத்த காயமடைந்த சிவபாண்டியன் நேரடியாக காரைக்குடியில் உள்ள மருத்துவமனைக்கு சென்று இருக்கின்றார். கையில் ரத்தம் சொட்ட சொட்ட பட்டாக்கத்தி தலையில் கழுத்தில் வெட்டு காயங்களுடன் வந்தவரை பார்த்த மருத்துவமனையில் இருந்த அனைவரும் அலறியடித்து ஓடினார்கள்.

இது பற்றி தனியறையில் இருந்த டாக்டர்களுக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அப்போது காரைக்குடி வடக்கு போலீசார் விரைந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் சிவபாண்டியனிடம் விசாரித்தபோது சொத்து பிரச்சினை காரணமாக தம்பி தன்னை வெட்ட வந்ததாகவும், அவரிடம் இருந்து பட்டாக்கத்தியை பறித்து பின்னர் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு வந்ததாகவும் தெரிவித்திருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!

Editorial visual featuring actress Mrunal Thakur.

கடந்த 9 மாதங்களாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாத நடிகை மிருணாள் தாக்கூர்: காரணம் என்ன?