---Advertisement---

டாஸ்மாக் கடைகளில் பல இடங்களில் திருட்டு – அதிரடி முடிவு எடுத்த நிர்வாகம்!

By Sri
Published on: March 27, 2020
---Advertisement---

ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இரு நாட்கள் மட்டுமே முடிந்துள்ள நிலையில் குடிகாரர்கள் பொறுக்கமாட்டாமல் டாஸ்மாக் கடை முன்னர் கூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,25,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் 730 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் நாடெங்கும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இரண்டு நாட்கள் மட்டுமே முடிந்துள்ளது.

இந்நிலையில் அதற்குள் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை உடைத்து அத்திமீறி நுழைந்து மதுபாட்டில்களை திருட முயற்சி செய்துள்ளனர். இதனால்  டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ்குமார் டாஸ்மாக் மேலாளர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு மற்றும் முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மதுக்கடைகளின் பூட்டை உடைத்து மதுபானங்களை திருடிச்செல்லும் சம்பவங்களை தடுக்கும் வகையில், மதுபானங்களை உடனடியாக டாஸ்மாக் குடோன்களுக்கு மாற்றம் செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாவட்ட மேலாளர்களிடம் அறிவுறுத்துகின்றனர்.

இதன்படி, தொலைதூர பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் இருந்து கொள்ளை போகும் சம்பவங்களை தடுக்கும் வகையில் மதுபானங்கள் வெளியே கொண்டு செல்லப்பட வேண்டும். மதுக்கடைகளில் இருந்து மதுபானங்கள் குடோன்களுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

ஒருவேளை குடோன்களில் போதுமான அளவுக்கு மதுபானங்களை வைக்க இடவசதி இல்லை என்றால் மாவட்ட மேலாளர்களால் அடையாளம் காணப்படும், மதுக்கடைகளுக்கு எடுத்துச் செல்வதற்கு வசதியாக, தங்களுடைய தாலுகாக்களில் உள்ள பண்டகசாலைகள், குடோன்கள் மற்றும் திருமண மண்டபங்களில் தற்காலிகமாக வைக்க வேண்டும்.

இதற்கான வாடகை கட்டணம் குறைவாக இருப்பதையும், ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி வரை வாடகைக்கு எடுக்க வேண்டும் என்பதையும் மாவட்ட மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மதுக்கடைகளில் இருந்து குடோன்கள், திருமண மண்டபங்களில் மதுபானங்கள் இருப்பு வைத்தால் அங்கு தீ தடுப்பான்கள் பொருத்துவதோடு, கண்காணிப்பு கேமரா பொருத்தியும் கண்காணிக்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்கள், பாதுகாப்பு ஊழியர்களை சுழற்சி முறையில் நிர்ணயித்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். இந்த ஏற்பாடுகளை தவிர போலீஸ் பாதுகாப்பும் போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் கமிஷனர்களிடம் இருந்து கேட்டு பெற வேண்டும்.

திருட்டு போவதற்கு வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் கடைகளில் இருந்து மதுபானங்கள் வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்போகும் செயல் திட்டத்தை மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் டாஸ்மாக் மேலாளர்கள் தெரிவிக்க வேண்டும். போதுமான அளவு போலீஸ் பாதுகாப்போடு மதுபானங்களை வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லவேண்டும். எந்தெந்த கடைகளில் இருந்து மதுபானங்கள் எந்த இடத்துக்கு மாற்றப்படுகிறது என்ற விவரத்தை மாவட்ட மேலாளர்கள் தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும்” – இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வரும் 'மிர்சாபூர் தி மூவி' படத்தின் சுவரொட்டி.

பாக்ஸ் ஆபிஸில் மிரட்டலான தொடக்கம்: முதல் நாளில் ரூ.17 கோடியைக் தாண்டி சாதனை படைத்த ‘மிர்சாபூர் தி மூவி’!

Conceptual graphic representing the reported collaboration between actor Suriya and director Mathimaran.

சூர்யாவின் அடுத்த மெகா கூட்டணி: ‘மண்டாடி’ இயக்குநர் மதிமாறனுடன் இணையவுள்ளாரா நடிகர் சூர்யா? – வைரலாகும் தகவல்!

Actress Wamiqa Gabbi emerging as Kollywood's new favorite leading lady.

கோலிவுட்டின் புதிய ஃபேவரைட் வாமிகா கபி: விஷால் மற்றும் சூர்யா படங்களுடன் ஹாட்ரிக் ஹிட் – முழு விவரம்!

Director Shiva Nirvana addressing recent cinematic collaboration rumors.

தனுஷ் இயக்கத்தில் புதிய படமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் శిவ நிர்வாண!

Behind-the-scenes concept graphic celebrating the fast-paced creation of the Muthumani music video from Dorothy.

இளையராஜாவின் இசையில் மிரட்டலான ‘முத்துமணி’ இசை வீடியோ: 5 நாட்களில் திட்டமிடப்பட்டு ஒரே நாளில் படமாக்கப்பட்ட சாதனை!

Official promotional poster celebrating Pyaar Prema Kalyanam trending #5 globally on Netflix.

நெட்ஃபிளிக்சில் சாதனை படைக்கும் ‘பியார் பிரேமா கல்யாணம்’: உலக அளவில் டாப் 5 இடத்தைப் பிடித்து மிரட்டல்!