Connect with us

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை… உதயநிதி ஸ்டாலின் பாராட்டு…!

Latest News

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை… உதயநிதி ஸ்டாலின் பாராட்டு…!

பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்து இருக்கின்றார்.

தமிழகத்தில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்ததாவது “பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றைய பிரிவில் தமிழகத்தை சேர்ந்த தங்கை துளசிமதி முருகேசன் வெள்ளி பதக்கமும் , தங்கை மனிஷா ராமதாஸ் வெண்கல பதக்கமும் வென்று அசத்தியிருக்கிறார்கள்.

சர்வதேச அரங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனை படைத்திருக்கும் தங்கைகள் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். தமிழ்நாடு அரசின் எல்லை திட்டம் மற்றும் தமிழ்நாட்டு சாம்பியன் அறக்கட்டளை மூலம் பயன் பெற்று வரும் இந்த இரண்டு வீராங்கனைகளும் பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான போதே தலா 7 லட்சத்தை ஊக்கத்தொகையாக வழங்கி உற்சாகப்படுத்தினோம்.

இன்றைக்கு பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமையை தேடித் தந்துள்ள அவர்களை வாழ்த்தி மகிழ்கின்றேன். நம் வீராங்கனை சாதனை பயணம் தொடர நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும். பாரா ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றைய பேட்மிட்டன் எஸ்ஹெச் 6 போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற நித்யஸ்ரீ சிவனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பாரா தடகள வீரர்களின் வரலாற்று சாதனையால் மகிழ்ச்சி அடைகிறோம். அவர்கள் எதிர்கால போட்டியில் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறோம்” என்று அதில் தெரிவித்திருந்தார்.

More in Latest News

To Top