இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள முதல் இலங்கைத் தமிழ் திரைப்படமான ‘அந்தோனி’ (Anthony), உலக சினிமா அரங்கில் வரலாற்று சாதனை படைக்கும் நோக்கில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. 2027ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளின் (Oscars 2027) சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவுக்கான தேர்வுப் போட்டிக்கு இப்படம் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்டுள்ளது.
சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் இணைந்து இயக்கியுள்ள இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளது கூடுதல் பலம் சேர்த்துள்ளது. இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம் (Sri Lanka National Film Corporation) மூலமாக இந்தப் படம் ஆஸ்கார் தேர்வுக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். உலகளாவிய சினிமா அரங்கில் இலங்கைத் தமிழ் சினிமாவின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இப்படத்தின் இந்த அறிவிப்பு, சினிமா வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.













