Latest News
தமிழுக்கு வந்த சோதனையை பார்த்தீர்களா…? அங்கன்வாடியில் அல்லோலப்பட்ட தமிழ்… வைரல் புகைப்படம்…!
அங்கன்வாடியில் தமிழை தப்பு தப்பாக எழுதியிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியத்தில் புதிதாக அங்கன்வாடி மையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இதில் தமிழ் எழுத்துக்களை கண்டு என்ன இது தமிழுக்கு வந்த சோதனை என்று பலரும் திட்டி வருகிறார்கள். குளித்தலை பகுதியில் 11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த அங்கன்வாடி மையத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்.
பின்னர் அங்கன்வாடி மைய கட்டிடத்திற்குள் குழந்தைகள் கற்பிப்பதற்காக வரையப்பட்டிருந்த தேசியக்கொடி, தேசிய தலைவர்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் பெயர்களில் பிழையுடன் எழுதப்பட்டிருந்தது .கொய்யாப்பழத்திற்கு கோய்யா பலம், வெண்டைக்காய்க்கு பதிலாக வெட்டககாய், வாழைப்பழத்துக்கு பதிலாக வாழைபலம், தர்பூசணிக்கு பதிலாக தர்புசணி என எழுதப்பட்டுள்ளது.
ஆங்கில மாதங்களும், தமிழ் மாதங்களும் தவறாக எழுதப்பட்டிருந்தது. இதை பார்த்து எம்எல்ஏ மற்றும் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார்கள். ஆரம்ப கல்வி கற்பதற்கு வரும் குழந்தைகளுக்கு இப்படித்தான் தவறாக எழுத சொல்லிக் கொடுப்பதா? என்று பெற்றோர்கள் ஆதங்கப்பட்டன. இதையடுத்து அவற்றை திருத்துவதற்கு உடனே உத்தரவிடப்பட்டுள்ளது.