அரசு மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் இருந்த 5 கிலோ கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை செய்திருக்கிறார்கள்.
மணப்பாறை அடுத்த வடுகபட்டி என்கின்ற கிராமத்தில் வசிப்பவர் கலா. இவரின் வயிற்றில் அடிக்கடி வலி ஏற்பட்டுள்ளதால் உள்ள காமராஜர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று இருக்கின்றார். அங்கு மருத்துவர்கள் அவரை ஸ்கேன் பரிசோதனை செய்யும்படி அறிவுறுத்தி இருக்கிறார்கள். அந்த பெண்ணிற்கு ஸ்கேன் செய்து பார்க்கும்போது அந்த பெண்ணின் வயிற்றில் கிட்டத்தட்ட மிகப்பெரிய கட்டி இருப்பது தெரியவந்தது.
அந்த கர்பப்பை கட்டியை உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்கள். இதனிடையே ரத்தத்தின் அளவு 4 எச்பி மட்டுமே இருந்ததால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. சராசரியாக 10-க்கு மேல் இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்று மருத்துவ குழுவினர் தெரிவித்தார்கள்.
பின்னர் அந்த குடும்பத்தினரிடம் பேசி அந்த பெண்ணிற்கு தொடர்ந்து முறையான சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. ரத்தத்தின் அளவை அதிகரிக்க 4 யூனிட் ரத்தமும் அந்த பெண்ணுக்கு செலுத்தப்பட்டது. இதையடுத்து தினமும் அந்த பெண்ணுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஹெச்பி 11 புள்ளிகளை கடந்த உடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நேற்று அறுவை சிகிச்சை மூலம் அந்த கட்டியை மருத்துவர்கள் அகற்றினார்கள்.
அதன்படி தலைமை மருத்துவர் தமிழ்மணி மேற்பார்வையில் மகப்பேறு அறுவை சிகிச்சை நிபுணர்கள் மருத்துவர்கள் மஜிதா, விஜயா, மயக்கவியல் மருத்துவர் என பலரும் அறுவை சிகிச்சை செய்து பெண்ணின் வயிற்றில் இருந்த 5 கிலோ அளவிலான கட்டியை அகற்றினார்கள். இதையடுத்து அந்த பெண் அறுவை சிகிச்சைக்கு பின் சாதாரண மருத்துவ அறைக்கு மாற்றப்பட்டார். அரசு மருத்துவமனை என்றால் பலரும் அலட்சியம் நிறைந்தது என்று கூறிவரும் நிலையில் பெண்ணுக்கு 5 கிலோ கட்டி கொண்ட சவாலான அறுவை சிகிச்சையை செய்து மருத்துவர்கள் சாதனை செய்திருக்கிறார்கள்.