Tamilnadu Politics
மக்களவை தேர்தலில் திமுக தொகுதி வேட்பாளர் பங்கீடு நிறைவு!
மக்களவை தேர்தலில், திமுக கூட்டணி அமைத்த கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கட்சி பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ், மதிமுக, இந்தி.கம்யூனிஸ்ட், மாக்.கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.
அதை தொடர்ந்து, இன்று எந்த எந்த தொகுதி எந்த எந்த கட்சிகளுக்கு என்ற விவரம் அறிவிக்கப்பட உள்ளது.
இதில் திமுக 20 தொகுதிகளிலும், காங்கிரஸ், புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளிலும், இந்தி. கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தலா இரு தொகுதிகளிலும், இதர கட்சிகள் தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.
காங்கிரஸ் உடான தொகுதி பிரிவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாகவும், பிறகு காங்கிரஸ்க்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.பின், காங்கிரஸ்க்கு உன்டான 9 தொகுதிகள் எவை எவை என்று முடிவு எடுக்கப்பட்டது என திமுக மாநில தலைவர் அழகிரி தெரிவித்தார்.