cinema news
சோனு சூட் பிறந்த நாள் இன்று
ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி, சிம்புவின் ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லனாக வலம் வந்தவர் சோனு சூட். திரையில் கொடூர வில்லனாக இவர் வலம் வந்தாலும் இவரின் நிஜ முகம் வேறு.
மிகவும் அமைதியான அன்பான பண்பான மனிதர் இவர். அதுவும் ஒரு அரசுக்கு நிகராக மக்களுக்கு ஓடி ஓடி சென்று உதவி செய்பவர்.
கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் சாலையோர மக்கள், நடந்து பாதசாரிகளாக ஊருக்கு சென்றவர்கள் அனைவருக்கும் தன் சொத்தை விற்று உதவி செய்தவர். அவர்கள் செல்ல பஸ், உண்ண உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் சோனு சூட் செய்து கொடுத்தார். இதற்காக ஐநா சிறந்த மனித நேயர் விருதை இவருக்கு அளித்தது. பொதுமக்கள் சிலர் தங்கள் குறைகளை சொல்ல இவரை நேரில் பார்த்து மனு கொடுப்பதற்காகவும் இன்றும் இவரது வீட்டு வாசலில் போய் காத்துக்கிடக்கின்றனர்.
இப்படி பண்பிலும் பாசத்திலும் நேசத்திலும் உயர்ந்த மனிதரான சோனு சூட்கு இன்று பிறந்த நாள் வாழ்த்தி மகிழ்வோம்.