cinema news
தான் நலமாக இருப்பதாக ஷகிலா தகவல்- வதந்தியை நம்ப வேண்டாம் என வேண்டுகோள்
தமிழில் கவுண்டமணி உள்ளிட்டவர்களுடன் ஆரம்பத்தில் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை ஷகிலா. ஒரு கட்டத்தில் மலையாள கவர்ச்சி படங்களில் இவர் நடித்து புகழ்பெற்றார்.
இந்த நிலையில் சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொண்டதன் மூலம் புகழ்பெற்றார்.
இந்நிலையில்
ஷகிலா மரணமடைந்துவிட்டதாக மர்ம நபர் ஒருவர் சமூகவலைதளங்களில் தகவல் பரப்பிவிட்டார். அத்தகவலின் உண்மைத் தன்மையை அறியாமல் பலரும் ஷேர் செய்ய ஆரம்பிக்க, அத்தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீபோல பரவியது. இது நடிகை ஷகிலாவின் கவனத்திற்கும் வர, இதுகுறித்து விளக்கமளித்து அவர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அக்காணொளியில், தான் நலமாக இருப்பதாகத் தெரிவித்துள்ள ஷகிலா, இத்தகவல் பரவ ஆரம்பித்த பிறகு நலம் விசாரித்து நிறைய தொலைபேசி அழைப்புகள் தனக்கு வந்ததாகவும், ரசிகர்களை என்னைப் பற்றி மீண்டும் நினைக்க வைத்ததற்காக அந்த மர்ம நபருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பேசியுள்ளார்.