Tamil Flash News

0.25 சதவீதம் வட்டியை குறைத்தது ரிசவ் வங்கி!

Published

on

மீண்டும், வட்டி சதவீதத்தை குறைக்க ரிசவ் வங்கி முடிவெடுத்துள்ளது.. இதனால், வீட்டு கடன் மற்றும் வாகனக் கடன் சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும்.

கடந்த பிப்ரவரி மாதம், அந்த கூட்டத்தில், மற்ற வங்கிகளுக்காக ரிசவ் வங்கி வழங்கும் வட்டி (ரெப்போ ரேட்) மற்றும் வங்கிகளிடம் இருந்து ரியவ் வங்கி வாங்கும் கடன் (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) சதவீதத்தை 0.25 சதவீதமாக குறைக்க முடிவு எடுத்துள்ளனர்.அப்போது, ரெப்போவின் சதவீதம் 6.25 ஆக இருந்தது.

இந்நிலையில், மீண்டும் நிதிக்குழு இன்று நடைப்பெற்ற நிலையில், மீண்டும் 0.25 சதவீத ரெப்போ ரேட்டை குறைக்க கூறி, குழுவினர் கேட்டு கொண்ட நிலையில், 6.25 சதவீதமாக இருந்த வட்டி விகிதத்தை 6 சதவீததமாக குறைத்துள்ளது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்துள்ளதால் வர்த்தக வங்கிகளும் வீடு, வாகனம் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version