கடந்த வாரம் ஓடிடியில் வெளியான திரைப்படம்தான் சூர்யா நடித்த ஜெய்பீம். இப்படத்தை ஞானவேல் இயக்கி இருந்தார். இருளர் இனத்தை சேர்ந்த ஒருவர் போலீசால் எப்படி துன்புறுத்தப்பட்டார் என்பதை நீண்ட விளக்கமாக இயக்கி இருந்தார் இயக்குனர் ஞானமுத்து.
இந்த படத்தில் வரும் போலீஸ் அதிகாரியின் பெயர் குருமூர்த்தி என இருந்தது. இப்படத்தில் ஒரு குறியீடாக வில்லனாக வருபவர் வீட்டின் காலண்டரில் வன்னியர் சங்க குறியீடு இடம்பெற்றிருந்தது. இது பலத்த எதிர்ப்புகளுக்கு பின் லட்சுமி காலண்டராக மாற்றப்பட்டது.
இருப்பினும் தேவையில்லாமல் வன்னியர் சங்கத்தை படத்தில் குறியீடாக காண்பிப்பதற்கு என்ன காரணம் என அன்புமணி இராமதாஸ் சூர்யாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் ஒரு வார காலம் ஆகியும் சூர்யா ஏன் வாய் மூடி மவுனம் காக்கிறார் என ராமதாஸ் அக்கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.







