---Advertisement---

சுமாரா தான் இருக்குதுங்க சீசன்…வெயில் வேற சுள்ளுன்னு அடிக்குதாமே குற்றாலத்துல…

Published on: July 5, 2024
Falls
---Advertisement---

குற்றாலத்தில் நேற்றை விட இன்று மாற்றம் காணப்பட்டது, அருவிகளில் தொடர்ந்து ஆர்ப்பரித்து கொட்டி வந்தது தண்ணீரின் அளவில். பாரபட்சமில்லாமல் எல்லா அருவிகளுலும் இதே நிலை தான் தொடர்ந்து வந்தது. வெயிலின் தாக்கம் அவ்வப்போது அதிகரித்து வந்தாலும் குளிக்க ஏதுவான நிலை தான் இருந்து வந்தது நேற்று வரை.

காற்று மற்றும் சாரல் கடந்த சில நாட்களாகவே தேட வைத்து குற்றாலத்தில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகளை. ஒரு சில நேரத்தில் விழுந்த சாரல் மனதை மகிழ வைத்தது.

அதே நேரத்தில் திடீர் திடீரென வருடிய தென்றல் காற்றும் ஆனந்தத்தை அதிகரிக்க வைத்தது. இப்படி ஒவ்வொரு நாளும் சிறிய மாற்றங்களோடு இருந்து வருகிறது இந்தாண்டிற்கான குற்றால சீசன்.

Courtallam
Courtallam (இன்று காலை பத்தரை மணி நிலவரம்).

இன்று காலை பத்தரை மணி நிலவரப்படி எல்லா அருவிகளிலும் விழக்கூடிய தண்ணீரின் அளவில் மாற்றம் இருந்தது. நேற்று போல இல்லாமல் இன்று ஃபைவ் ஃபால்ஸ், பழைய குற்றாலம், மெயின் அருவியில் விழும் தண்ணீர் குறைவாகவே தென்படுகிறது. வெயிலின் தாக்கம் நேற்றை விட இன்று அதிகமாகத் தான் இருக்கிறது.

ctrlm
ctrlm                                                                                                                                 பெரிய அளவிலான மக்கள் கூட்டத்தை இன்று பாரக்க முடியவில்லை. இருந்த போதும் எப்படியும் குற்றால அருவிகளில் குளித்தே தீர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு ஏற்ற நிலை தான் இன்று இருக்கிறது.

வருபவர்களை ஏமாற்றாத அளவில் மிதமான தண்ணீர் அதிக நேரம் எடுத்து உல்லாசமாக குளித்து மகிழவைக்கும் படியான குறைவான கூட்டம் இது தான் இன்று காலையின் சீசன் நிலவரமாக இருந்து வருகிற்து குற்றாலத்தை பொறுத்தவரை.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'பத்தா' படத்தின் 'ஊரோட ஒத்த டான்' பாடலின் அதிகாரப்பூர்வ விளம்பரப் போஸ்டர்.

மக்களின் இசையில் கலக்கும் ‘பத்தா’ படத்தின் இரண்டாவது சிங்கிள்: விஜய் சேதுபதியின் ‘ஊரோட ஒத்த டான்’ பாடல் வெளியீடு!

Promotional poster for Ashok Selvan and Preity Mukundan's Anbil Avan.

அக்டோபர் 2-க்கு ஒத்திவைக்கப்பட்ட ‘அன்பில் அவன்’: அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Collaborative file photo of Nanjil Vijayan and Vaishu.

மனக்கசப்புகள் நீங்கி ஒன்றுபட்ட நாஞ்சில் விஜயன் – வைஷு: சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் சமாதானம்!

'மகாவீர் கர்ணா' திரைப்படத்தின் மிரட்டலான முதல் தோற்றப் போஸ்டர்.

மகாபாரதத்தின் மாவீரன் கர்ணன் முதல் தோற்றம்: இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மகாவீர் கர்ணா’!

Epic promotional poster for Vijay Deverakonda's Ranabaali.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் வெளியாகும் ‘ரணபலி’: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் சரித்திரப் படம்!

Official theatrical release announcement poster for Basil Joseph and Akshay Kumar's Raawadi.

கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!