---Advertisement---

எதுவும் கொண்டு வர வேண்டாம்- ஸ்டாலின்

Published on: May 14, 2021
---Advertisement---

சமீபத்தில் திராவிட முன்னேற்ற கழகம் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. ஆட்சியை பிடித்தது முதல் ஸ்டாலினின் நடவடிக்கைகள் அனைத்தும் ஆச்சரியமாக உள்ளது.

அனைத்து விசயங்களிலும் மிகவும் எளிமையை கடைபிடித்து வருகிறார் இவர். இந்நிலையில் தற்போது கொரோனா பரவி வரும் இக்கொடிய சூழலில் ஸ்டாலினின் எளிமையான அறிவிப்பும் தொண்டர்களையும் மக்களையும் கவர்ந்துள்ளது.

இன்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, என்னைச் சந்திக்க வருவோர் பூங்கொத்து, பொன்னாடைகளைத் தவிர்க்க வேண்டும். அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஆடம்பர வரவேற்பு நிகழ்வுகளைத் தவிர்த்திட வேண்டும். நம் செயல்களின் மூலமாக மக்கள் மனதில் இடம்பிடிப்போம்; நின்று நிலைபெறும் சாதனைகள் மூலமாக மக்களின் அன்பைப் பெறுவோம் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.