---Advertisement---

தமிழக மீனவர்கள் 32 பேர் சிறைப்பிடிப்பு… தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்…!

By Sri
Published on: August 8, 2024
---Advertisement---

தமிழகத்திலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகின்றது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்று இருக்கிறார்கள்.

அப்போது புத்தாளம் அருகே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 32 மீனவர்களை கைது செய்தது மட்டும் இல்லாமல் 4 நாட்டுபடகையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட 32 மீனவர்களும் இலங்கை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. மீனவர்கள் 32 பேர் சிறைபிடிக்கப்பட்ட தகவல் அறிந்த சக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றார்கள். உடனடியாக அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க