---Advertisement---

புரட்டாசி சனி கிழமைகளில்… நவதிருப்பதி செல்ல சிறப்பு பேருந்துகள்… நெல்லையில் ஏற்பாடுகள் தீவிரம்..!

By Sri
Published on: September 9, 2024
---Advertisement---

நெல்லையில் புரட்டாசி மாதர் சனிக்கிழமைகளில் நவதிருப்பதி கோவிலுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரட்டாசி மாதம் பிறப்பதை முன்னிட்டு நெல்லையில் இருந்து நவதிருப்பதி கோயில்களுக்கு சென்று வர போக்குவரத்துக் கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி நவதிருப்பதி கோவில்களான ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி, பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார் திருநகரி ஆகிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அந்த வகையில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளான வருகிற 21, 28 மற்றும் அடுத்த மாதம் 5 ,12 தேதிகளில் நான்கு நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்து இருக்கின்றது. இதற்கு ஏற்ற ஏற்பாடுகளை நெல்லை மண்டலம் போக்குவரத்து கழகம் செய்திருக்கின்றது.

இந்த சிறப்பு பேருந்துகள் புரட்டாசி மாத சனிக்கிழமை காலை 7 மணிக்கு நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு நவதிருப்பதிகளுக்கு சென்று பின்னர் இரவில் மீண்டும் புதிய பேருந்து நிலையத்திற்கு வரும் என்று கூறப்பட்டிருக்கின்றது. இதற்கு ஒரு நபருக்கு ரூபாய் 500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது.

இதற்காக முன் பதிவு செய்ய விரும்புவோர் நெல்லை புதிய பேருந்து நிலையம் தென்காசி மற்றும் சங்கரன்கோயில் பேருந்து நிலையங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டண தொகையை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அல்லது அரசு போக்குவரத்து கழக இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல மேலாளர் சரவணன் தெரிவித்திருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!

Actor Legend Saravanan speaking at a private college event in Chennai.

விஜய் சார் படங்கள் போல என் படமும் இருக்கும்: டிரிபிள் ஆக்ஷனில் களமிறங்கும் லெஜெண்ட் சரவணன்!