---Advertisement---

தமிழகத்தில் நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு…!

By Sri
Published on: August 29, 2024
---Advertisement---

தமிழகத்தில் நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகம் தெரிவித்திருக்கின்றது.

அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பாக வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருந்ததாவது: “நாளை 30ஆம் தேதி முகூர்த்த நாள் மற்றும் சனிக்கிழமை 31ஆம் தேதி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 1ஆம் தேதி வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் பிற இடங்களில் இருந்து கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள். திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 355 பேருந்துகளும், சனிக்கிழமை 360 பேருந்துகளும் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது.

மேலும் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் பெங்களூர் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 75 பேருந்துகளும், சனிக்கிழமை அன்று 75 பேருந்துகளும் இயக்க உள்ளதாக கூறப்படுகின்றது.

அதேபோல நாளை மாதாவரத்தில் இருந்து 20 பேருந்துகளும், நாளை மறுநாள் 20 பேருந்துகளும் இயக்கப்படுகின்றது. விடுமுறை முடிந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

சர்தார் 2 பட விழாவில் பேசிய நடிகர் கார்த்தி மற்றும் மாலவிகா மோகனன்.

Karthi Faces Severe Backlash: ‘மாலவிகாவை அப்படி எதிர்பார்த்தேன்’ – மோனிகா பெல்லூச்சி ஒப்பீட்டால் இணையத்தில் வெடித்த விவாதம்!

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!