ஸ்மார்ட் ஃபோன் வந்த பிறகு நிறைய கலாச்சாரங்கள் மாறிவிட்டது. ஸ்மார்ட்ஃபோனை அடிப்படையாக வைத்து என்னென்னவோ விபரீதங்கள் எல்லாம் நடக்கிறது. இந்த நிலையில் ஒடிசாவை சேர்ந்த ஒரு சிறுவன் 26 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
திருமணம் செய்த சில நாட்களில் அந்த பெண்ணோடு கூலி வேலைக்காக ராஜஸ்தான் சென்ற அந்த நபர் அந்த பெண்ணை ஸ்மார்ட் ஃபோன் வாங்குவதற்காக 1.8 லட்சத்துக்கு ஒரு 55 வயது நபருக்கு விற்றுள்ளார்.
தற்போது அந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பபட்டுள்ளான்.
அந்த பெண்ணும் மீட்கப்பட்டுள்ளார்.







