திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் உள்ளது சிவன்மலை முருகன் கோவில். புகழ்பெற்ற முருகன் கோவிலான இந்த கோவிலில் சிவவாக்கிய சித்தர் இருந்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.
இந்த கோவிலில் உள்ள முருகன் தன் பக்தர்களின் கனவில் ஏதாவது ஒரு பொருளை பூஜையில் வைத்து வழிபட சொல்லி கனவில் சென்று சொல்வது நம்பிக்கை. இப்படி பக்தர்கள் சொல்லும் பொருட்கள் கோவில் அலுவலகத்தில் சொல்லிய பிறகு முறைப்படி முருகன் முன் பூக்கட்டி போட்டு பக்தருக்கு ஆதரவாக வந்தால் பக்தர் சொன்ன பொருளை பூஜையில் வைப்பார்கள்.
அந்த பொருளால் உலகத்துக்கு ஏற்பட இருக்கும் ஆபத்து நீங்குவதாக ஐதீகம் உலக அளவிலும் இந்திய அளவிலும் இந்த கோவிலில் உள்ள உத்தரவு பெட்டி எனும் பெட்டியில் பக்தர்கள் சொல்லி வைக்கப்பட்ட பொருட்கள் சார்ந்து பல பெரிய இன்னல்கள் வந்துள்ளது . ஆனால் அந்த இன்னல்கள் பெரிய அளவில் வராமல் முருகன் காத்துள்ளார் அதனால்தான் உத்தரவு பெட்டியில் வைத்து அடுத்த பக்தர் அடுத்த பொருள் வந்து சொல்லும் வரையில் தற்போதைய பொருளுக்கு பூஜை செய்யப்படுகிறது.
நேற்று முன் தினம் இருந்து வில் அம்பு வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.













