---Advertisement---

ஷெபாஸ் செரீபின் ஆட்சியில் நாடு பாதுகாப்பாக இல்லை- இம்ரான்கான்

Published on: April 17, 2022
---Advertisement---

பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் ஆட்சியில் பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்களுக்கு பாதுகாப்பு  இல்லை என்று முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறினார்.  பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததையடுத்து பிரதமராக இருந்த இம்ரான் கான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பாகிஸ்தானின் 23வது பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றார். அப்போதிருந்து ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக இம்ரான் கான் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தொடர்பாக, இம்ரான் கானுக்கும், பாகிஸ்தான்  ராணுவத்துக்கும் இடையே வார்த்தைப் போர் நீடித்து  வருகிறது.

சமீபத்தில் பெஷாவரில் நடந்த ரோட் ஷோ நிகழ்ச்சியில் பேசிய இம்ரான் கான், ‘ஷெபாஸ் ஷெரீப்பின் ஆட்சியில் பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக  இல்லை’ என்று கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும்  வகையில், இம்ரான் கானின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் ராணுவம் நிராகரித்தது. இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவு மேஜர் ஜெனரல் பாபர் இப்திகார் கூறுகையில், ‘பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தனி மனிதனுக்கு சொந்தமானது அல்ல; எங்களது அணுஆயுதங்களுக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார். ஆட்சி கவிழ்ப்புக்கு காரணம் வெளிநாட்டு சதி என்று இம்ரான் கான் கூறிய நிலையில், தற்போது அணுஆயுத அச்சுறுத்தல் குறித்து பேசியிருப்பது பாகிஸ்தான் அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Nayanthara and Trisha in consideration as heroine for Karthi and Mohan Raja's movie.

கார்த்தி ஜோடியாக நயன்தாரா அல்லது த்ரிஷா? மோகன் ராஜா படத்தின் ஹீரோயின் ரேஸில் யார் முன்னணி?

Director Sreenu Vaitla talking about missing the chance to direct Ajith Kumar.

நடிகர் அஜித்துடனான அந்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன்: பிரபல தெலுங்கு இயக்குநர் வருத்தம்!

Actress Mrunal Thakur and cricketer Yashasvi Jaiswal sparking viral dating rumours.

பிரபல நடிகை மிருணாள் தாக்கூர் மற்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டேட்டிங் ரகசியம்? இணையத்தில் தீயாய் பரவும் வைரல் வீடியோ!

Movies and web series releasing on OTT platforms this week.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் முழு லிஸ்ட்!

Singer Kenesha Francis makes a social media comeback.

சர்ச்சைகளுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் கம்பேக் கொடுத்தார் கெனிஷா: ‘ஓடி ஓடி’ பாடலைத் தயார் செய்த அறிவிப்பு!

Vijay Sethupathi reveals the first look poster of Makkal Kaavalan.

மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!