---Advertisement---

செந்தில் பாலாஜி கோரிக்கை நிராகரிப்பு… 51-வது முறையாக நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்…!

By Sri
Published on: July 30, 2024
---Advertisement---

செந்தில் பாலாஜியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் 51 வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலானது 50-வது முறையாக நீட்டிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வரும் நிலையில் நீதிமன்ற காவலை நாளை வரை நீட்டித்து சென்னை முதன்மை அவ்வுளவு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.

சட்டவிரோத பண்ணையப் பரிமாற்ற தடைச் சட்டம் வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரின் ஜாமின் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.  செந்தில் பாலாஜி இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் .

இந்த மனு மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகின்றது. நேற்று புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் நீதிபதி அல்லி முன்பாக செந்தில் பாலாஜி ஆஜரான நிலையில் இன்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காவலை நீட்டித்து ஆணை பிறப்பித்தது. இந்நிலையில் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைத்து செந்தில் பாலாஜி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தள்ளி வைக்க முடியாது என கூறி செந்தில் பாலாஜி மனுவை முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குற்றச்சாட்டு பதிவை இழுத்தடிக்கும் நோக்கில் அவகாசம் கூறப்படுகிறது என ED தரப்பு தனது வாதத்தை முன் வைத்தது. இதையடுத்து இந்த குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிமன்றம் ஆகஸ்ட் 2-ம் தேதி செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 51 வது முறையாக நீட்டிக்கப்பட்டிருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.