---Advertisement---

சர்தார் 2 புதிய ஜானர் படம்: இயக்குனர் பி.எஸ். மித்ரன் மற்றும் நடிகர் கார்த்தியின் சுவாரஸ்யமான பேட்டி!

Published on: September 8, 2026
Actor Karthi and director PS Mithran discussing a scene during the production of Sardar 2.
---Advertisement---

மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சர்தார் 2’ (Sardar 2) திரைப்படம் குறித்து, படத்தின் இயக்குநரான பி.எஸ். மித்ரன் மற்றும் நாயகன் கார்த்தி பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். வரும் செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படம் குறித்த முக்கிய விவரங்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்துப் பேசிய இயக்குநர் பி.எஸ். மித்ரன், “சர்தார் 2 நன்கு பரிச்சயமான உலகத்தையும் கதாபாத்திரங்களையும் கொண்டதுதான், ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட ஒரு மண்டலத்தை ஆராய்கிறது. இது முதல் பாகம் போலல்லாமல், ஒரு உளவியல் சார்ந்த ஒரிஜின் கதை போன்ற உணர்வைத் தரும். வழக்கமான ஆக்‌ஷன் படங்களில் ஒரு பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்றும் நாயகன் கதை இருக்கும்; ஆனால் இதில் ஒரு அட்வென்ச்சர் பொருளை நோக்கி நாயகனும். வில்லனும் பயணிக்கிறார்கள். க்ளோஸ்டு-ரூம் மிஸ்டரி மற்றும் அட்வென்ச்சர் கலந்த இந்த புதிய ஜானரை ரசிகர்கள் திரையில் நிச்சயம் ரசிப்பார்கள். படப்பிடிப்பு முடிந்த பிறகு கடந்த ஒரு ஆண்டாக இப்படத்தின் எடிட்டிங் பணிகளைச் செய்து வருகிறேன்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நடிகர் கார்த்தி, “சர்தார் 2 ஒரு சிறந்த சமூகக் கருத்துள்ள நல்ல ஸ்பை ஆக்‌ஷன் திரைப்படமாகும். இப்படத்தின் ஆழத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள, இரண்டாம் பாகத்தைப் பார்ப்பதற்கு முன் முதல் பாகமான ‘சர்தார்’ திரைப்படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு வருவது நல்லது. உலக நாயகன் கமல் ஹாசனுக்கு ‘இந்தியன்’ படம் எத்தகைய முக்கியமானதோ, அதேபோல் என் சினிமா வாழ்க்கையில் ‘சர்தார்’ எனக்கு மிக முக்கியமான படமாகும். தொடர்ந்து 3 ஆண்டுகள் பரிசோதனை முயற்சியிலான படங்களில் நடித்த பிறகு, எனக்கு மிகவும் அவசியமான ஒரு கமர்ஷியல் திரைப்படமாக இது அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Prominent Kollywood directors Mohan Raja and Shakthi Soundar Rajan working on sequel scripts.

தனி ஒருவன் 2 மற்றும் மிருதன் 2: மிரட்டலான சீக்வெல் படங்களின் ஸ்கிரிப்ட் பணிகள் தீவிரம்!

Official announcement banner featuring Keneeshaa's musical debut for An Ordinary Man.

கெனிஷாவின் மியூசிக் டெப்யூ: ரவி மோகன் இயக்கத்தில் ‘அன் ஆர்டினரி மேன்’ – நெட்ஃபிளிக்ஸ் வெளியீட்டுத் தகவல்!

Official first look poster for Shivarajkumar's upcoming film Picasso.

ஹட்ரிக் நாயகன் சிவராஜ்குமாரின் ‘பிகாசோ’: மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Official promotional still released by RKFI revealing Seeman's appearance in Seyon.

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில்: சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் இணைகிறார் செந்தமிழன் சீமான்!

Official title teaser announcement banner for Shanmugapandian's King And Queens.

சண்முக பாண்டியனின் ‘கிங் அண்ட் குயின்ஸ்’: டைட்டில் டீசரை வெளியிட்டு சிறப்பித்த நடிகர் சிவகார்த்திகேயன்!

Official theatrical release date announcement banner for the film Anbil Avan.

ஹேப்பி ஹை தயாரிப்பில் ‘அன்பில் அவன்’: செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் சிறப்புத் திரைப்படம்!