விளையாட்டு துறைக்கு வெறும் 20 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: ‘கேலோ இந்திய திட்டம் தொடங்கப்பட்டது முதல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மன்சூர் மாண்டவியா தெரிவித்திருந்தார்.
இந்த புள்ளி விவரம் ஒரவஞ்சனையின் மொத்த வடிவமாக இருக்கின்றது. கடந்த ஏழு ஆண்டுகளில் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்திற்கும், குஜராத்துக்கும் தலா 400 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் தமிழகத்திற்கு மட்டும் வெறும் 20-வது கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உலக செஸ் போட்டி, ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன், தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளை தமிழக அரசு நடத்தி இருக்கின்றது. சர்வதேச அரங்கில் இந்திய விளையாட்டு துறையின் முழு அங்கமாக தமிழகம் விளங்குகின்றது. விளையாட்டு துறையில் இவ்வளவு ஆக்கமாக செயல்பட்டு வரும் தமிழ்நாட்டிற்கு வரும் 20 கோடியை ஒதுக்கி இருப்பது, தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு இழக்கப்படும் அநீதி. இதனை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.







