---Advertisement---

தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களுக்கும் ‘ரெட் அலார்ட்’… வானிலை எச்சரிக்கை..!

By Sri
Published on: July 30, 2024
---Advertisement---

தமிழகத்தில் இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “மேற்கு திசை காற்றின் வேகமா மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது.

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசி வருகின்றது. இதனால் நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் மலைப்பகுதிகளில் அதிக கன மழை பெய்யும். இதனால் அங்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மற்றும் தென்காசி மாவட்டம் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், திருப்பூர், திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது” என்று அறிவித்துள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Dive into The Storyteller: An Enchanting Tribute to Satyajit Ray

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.