---Advertisement---

தோல்வியில் முடிந்த பலாத்காரம்… 7 வயது சிறுமியை கொன்று புதைத்த தலைமையாசிரியர்… அதிர்ச்சி சம்பவம்…!

By Sri
Published on: September 25, 2024
---Advertisement---

பாலியல் பலாத்காரத்திற்கு 7 வயது சிறுமி ஒத்துழைக்க மறுத்ததால் அவரை தலைமை ஆசிரியர் கொன்று புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

குஜராத் மாநிலம், தாகோத் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றின் வளாகத்தில் புதைக்கப்பட்ட 6 வயது சிறுமியின் உடலானது கண்டுபிடிக்கப்பட்டது. பிரத பரிசோதனையில் சிறுமி மூச்சுத்திணறி உயிரிழந்ததாக தெரிவித்தார்கள். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்திருக்கிறார்கள்.

உயிரிழந்த சிறுமி படித்து வந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் சிறுமியை தினமும் பள்ளிக்கு தனது காரில் அழைத்துச் செல்வார் என சிறுமியின் தாய் கூறியிருக்கின்றார். எனவே 55 வயதான பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்த் நாத்திடம் காவல்துறையினர் விசாரணை செய்தார்கள். அன்றைய தினம் காலையில் சிறுமியை பள்ளியில் இறக்கிவிட்டு தான் வேறு ஒரு வேலையாக வெளியில் சென்றதாக கூறியிருந்தார்.

பின்னர் அவர் சென்ற இடங்களை அவரின் செல்போன் லொகேஷன் மூலம் போலீசார் ட்ராக் செய்தார்கள். அவர் சிறுமியை இறக்கிவிட்ட தினம் காலை பள்ளிக்கு தாமதமாக வந்திருக்கின்றார். இதை வைத்து அவரிடம் விசாரணை செய்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். சம்பவ தினத்தன்று காலை சிறுமியை வீட்டிலிருந்து 10.20 மணிக்கு அழைத்துச் சென்றதாக சிறுமியின் தாயார் கூறியிருந்தார்கள்.

ஆனால் சிறுமி பள்ளிக்கு வரவில்லை என்று ஆசிரியர்களும் மாணவர்களும் தெரிவித்திருந்தார்கள். சிறுவியை பள்ளிக்குச் செல்லும் வழியில் தான் தலைமை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றிருக்கின்றார். அதற்கு சிறுமி ஒத்துழைக்காத காரணத்தால் கத்தி இருக்கின்றார்.

இதையடுத்து அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தலைமை ஆசிரியர் வாக்குமூலம் அளித்துள்ளார். சிறுமியின் உடலை தனது காரில் வைத்து பூட்டிவிட்டு மாலை 5 மணி அளவில் பள்ளிக்கூடத்திற்கு பின்னால் சிறுமியை புதைத்ததாக தெரிவித்திருந்தார். இதையடுத்து தலைமையாசிரியரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வரும் 'மிர்சாபூர் தி மூவி' படத்தின் சுவரொட்டி.

பாக்ஸ் ஆபிஸில் மிரட்டலான தொடக்கம்: முதல் நாளில் ரூ.17 கோடியைக் தாண்டி சாதனை படைத்த ‘மிர்சாபூர் தி மூவி’!

Conceptual graphic representing the reported collaboration between actor Suriya and director Mathimaran.

சூர்யாவின் அடுத்த மெகா கூட்டணி: ‘மண்டாடி’ இயக்குநர் மதிமாறனுடன் இணையவுள்ளாரா நடிகர் சூர்யா? – வைரலாகும் தகவல்!

Actress Wamiqa Gabbi emerging as Kollywood's new favorite leading lady.

கோலிவுட்டின் புதிய ஃபேவரைட் வாமிகா கபி: விஷால் மற்றும் சூர்யா படங்களுடன் ஹாட்ரிக் ஹிட் – முழு விவரம்!

Director Shiva Nirvana addressing recent cinematic collaboration rumors.

தனுஷ் இயக்கத்தில் புதிய படமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் శిவ நிர்வாண!

Behind-the-scenes concept graphic celebrating the fast-paced creation of the Muthumani music video from Dorothy.

இளையராஜாவின் இசையில் மிரட்டலான ‘முத்துமணி’ இசை வீடியோ: 5 நாட்களில் திட்டமிடப்பட்டு ஒரே நாளில் படமாக்கப்பட்ட சாதனை!

Official promotional poster celebrating Pyaar Prema Kalyanam trending #5 globally on Netflix.

நெட்ஃபிளிக்சில் சாதனை படைக்கும் ‘பியார் பிரேமா கல்யாணம்’: உலக அளவில் டாப் 5 இடத்தைப் பிடித்து மிரட்டல்!