தமிழ் நாட்டின் சூலூர் விமானப்படைத்தளத்தில் இருந்து புறப்பட்ட ராணுவ விமானம் குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் விழுந்ததில் இந்தியாவின் தலைமை ராணுவத்தளபதி பிபின் ராவத் அவர் மனைவி உட்பட 11பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
இந்த பரிதாப சம்பவம் நாடு முழுவதும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சூலூர் விமான படை தள அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் , காட்டேரி நச்சப்புராசத்திரம் மலைப்பகுதியில் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க இருக்கிறார். அப்போது ஹெலிகாப்டர் எவ்வாறு விபத்துக்குள்ளானது என்பது குறித்து விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.













