கேரளா வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கின்றார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு, வயநாடு, மல்லபுரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடுத்து செல்லப்பட்டது. இந்த நிலச்சரிவின் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் 50 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களை சேர்ந்த 1000 பேர் இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. தற்போது வரை இந்த நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
70 பேர் காயமடைந்து இருக்கிறார்கள். இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் கவலை அளிக்கின்றது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்களையும் இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிராத்திக்கிறேன். மேலும் கேரள முதலமைச்சர் பினராய் விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு பணிகள் குறித்து பேசி விட்டேன். மீட்பு பணிகளுக்கு மத்திய அரசு சார்பில் என்ன உதவி வேண்டுமானாலும் வழங்கப்படும். மேலும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 2 லட்சம் ரூபாயும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்படும்” என்று தெரிவித்திருக்கின்றார்.







