---Advertisement---

இந்திய அரசு செய்யவேண்டியது என்ன? ப சிதம்பரத்தின் 10 அறிவுரைகள்!

By Sri
Published on: March 26, 2020
---Advertisement---

ஊரடங்கு உத்தரவால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் 10 அறிவுரைகளை முன்னாள் நிதியமச்சர் ப சிதம்பரம் வழங்கியுள்ளார்.

ப சிதம்பரத்தின் 10 அறிவுரைகள்;-

  1. விவசாயிகளுக்கு பிரதமர் கிஷான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையை இரண்டு மடங்காக்கி 12 ரூபாயாக உடனடியாக பயனாளர்களின் வங்கிக் கணக்கிலும் செலுத்தவேண்டும்.

    2. குத்தகை விவசாயிகளையும் பிரதமர் கிஷான் திட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும். அவர்களைப் பற்றி விவரங்களைப் பெற்று உதவித் தொகையாக ரூ.6,000 என்று இரண்டு தவணையாக வழங்கவேண்டும்.

3.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பயனாளர்களுக்கு உடனடியாக 3,000 ரூபாயை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தவேண்டும்.

4.நகர்புறங்களில் வாழும் ஏழை மக்களின் ஜன்தன் வங்கிக் கணக்கிலும் 6,000 ரூபாயை உடனடியாக செலுத்தவேண்டும். ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

5.குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் எல்லோருக்கும் 10 கிலோ அரிசி அல்லது கோதுமையை முற்றிலும் இலவசமாக வழங்கவேண்டும்.

6.பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் அனைத்தையும், தற்போதைய பணியாட்களுக்கு ஊதியத்தை வழங்கவேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொள்ளவேண்டும். ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வழங்கப்படும் பணம்  30 நாள்களில் திரும்ப அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அரசு அளிக்கவேண்டும்.

7.மேற்கண்ட பிரிவுகளில் பயன் பெறாதவர்களை அடையாளம் காண்பதற்கு எல்லா வார்டுகளிலும் கணக்கெடுப்பு நடத்தவேண்டும். அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவர்களுக்கு வங்கிக் கணக்கு இல்லையென்றால் அவர்களுக்கு உடனடியாக வங்கிக் கணக்கைத் தொடங்கி அவர்களுக்கு 3,000 ரூபாய் வழங்கவேண்டும்.

8.அனைத்து வரிகளையும் செலுத்துவதற்கு ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கவேண்டும்.

9.மாதத்தவணையை ஜூன் மாதம் 30-ம் தேதி வரை வசூலிக்கக் கூடாது என்று வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

10.எல்லா அத்தியாவசியப் பொருள்களுக்கான ஜி.எஸ்.டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official theatrical release date announcement banner for the film Anbil Avan.

ஹேப்பி ஹை தயாரிப்பில் ‘அன்பில் அவன்’: செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் சிறப்புத் திரைப்படம்!

Actor Meesai Rajendran with Vadivelu and Vijayakanth in a file photo.

வடிவேலுவால் ஏற்பட்ட அவமானம்: விஜயகாந்த் எனக்கு ஆதரவாக நின்றார் – மீசை ராஜேந்திரன் உருக்கம்!

சர்தார் 2 பட விழாவில் பேசிய நடிகர் கார்த்தி மற்றும் மாலவிகா மோகனன்.

Karthi Faces Severe Backlash: ‘மாலவிகாவை அப்படி எதிர்பார்த்தேன்’ – மோனிகா பெல்லூச்சி ஒப்பீட்டால் இணையத்தில் வெடித்த விவாதம்!

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!