---Advertisement---

அரசு பள்ளிகளில் ஜாதி பெயரா…? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!

By Sri
Published on: July 26, 2024
---Advertisement---

மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்பட்டு வரும் அரசு பள்ளிகளில் ஜாதி பெயர் இருக்கலாமா என்று நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கின்றார்.

கல்வராயன் மலை மேம்பாட்டு தொடர்பான வழக்கை சென்னை ஹைகோர்ட் தாமாகவே முன்பு விசாரணைக்கு எடுத்து நடத்தி வருகின்றது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கல்வராயன் மலையில் 150 பள்ளிகளில் இருப்பதாகவும் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஜாதி பெயர் பயன்படுத்தக்கூடாது. தெருக்களில் உள்ள ஜாதி பெயரை நீக்கிது போல அரசு பள்ளிகளிலும் ஜாதி பெயரை நீக்கிவிட வேண்டும்.

கல்வராயன் மலைப்பகுதிகளை பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் தலைமையில் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் . அரசு குழு உடன் மூத்த வழக்கறிஞர் தமிழ்மணியும் உடன் செல்ல வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்து இருக்கின்றார். மேலும் இந்த வழக்கை 9-ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.