Latest News
சீதாராம் யெச்சூரி உடல் நலக்குறைவால் மறைவு… தலைவர்கள் இரங்கல்..!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக செயல்பட்டு வருபவர் சீதாராம் யெச்சூரி. இவர் இன்று உடல்நல குறைவால் காலமானார். இவரின் மறைவுக்கு ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சீதாராம் யெச்சூரி மறைவு செய்தி பெரும் வருத்தம் கொடுக்கின்றது. பலம்பெறும் அரசியல்வாதியான சீதாராமை நான் நீண்ட காலம் அறிவேன். அவரது மறைவு தேசிய அரசியலுக்கு பெரும் இழப்பு என்று தெரிவித்து இருக்கின்றார்.
மேலும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்ததாவது சீதாராம் யெச்சூரி எனக்கு மிகச்சிறந்த நண்பர். நமது நாட்டினை ஆழமாக புரிந்து கொண்டவராகவும் தேசத்தின் சிந்தனை பாதுகாப்பவராகவும் விளங்கினார். அவருடன் நடத்திய நீண்ட விவாதங்களை நான் இழந்துள்ளேன். சீதாராம் யெச்சூரியின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இந்த துயரமான தருணத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சீதாராம் யெச்சூரி மறைவு செய்தி அதிர்ச்சியும் வேதனையும் கொடுக்கின்றது. இடதுசாரி இயக்கத்தின் தீவிர வீரரும், இந்திய அரசியலில் மிகச்சிறந்த ஆளுமையாகவும் இருந்தவரின் மறைவு செய்தி வருத்தத்தை தருகின்றது என்று கூறியிருந்தார். மேலும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் தலைவர்கள் தொடர்ந்து அவருக்கு இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.