Tamilnadu Flash News

Latest Tamilnadu News | Latest Film News | Tamil Movie Releases | Tamil Cinema |

Latest News national

பெண்ணை கற்பழித்து தலையை துண்டித்து… உடலை ரோட்டில் தூக்கி வீசிய கொடூரம்… உ.பியில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஒரு பெண்ணை கற்பழித்து அவரின் தலையை துண்டித்து நிர்வாணமாக நடுரோட்டில் தூக்கி வீசிய கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள குஜைனி என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் தலை இல்லாத நிர்வாணமான ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் உடலை கைப்பற்றினார்கள். மேலும் அந்த பெண்ணை கற்பழித்து தலையை துண்டித்து கொன்று விட்டு நிர்வாணமாக உடலை சாலையில் வீசி சென்று இருக்கிறார்கள் என்று தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட அந்த பெண் யார் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது நெடுஞ்சாலையின் மறு புறத்தில் உள்ள மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் உடல் கிடந்த இடம் அருகே ஒரு பெண் நடந்து செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

அந்த பெண் சாம்பல் நிற கால் சட்டை அணிந்திருந்தார். மேலும் பெண் உடல் அருகே சாம்பல் நிற ஆடையுடன் துண்டுகள் இருந்தன. இது குறித்து போலீசார் கூறும்போது உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் எந்த கேமராவும் இல்லை. ஆனால் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேமராவில் பெண் ஒருவர் தனியாக நடந்து செல்லும் காட்சிகள் மட்டும் பதிவாகி இருந்தன.

அந்த பெண் அணிந்திருந்த உடைகள் நெடுஞ்சாலையில் பெண் உடல் அருகே கைப்பற்றப்பட்ட துணி மற்றும் செருப்புகளுடன் ஒத்துப் போகின்றது. கேமராவில் பதிவாகி இருந்த பெண் குறித்து போலீசார் அப்பகுதி மக்களிடையே விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. மேலும் இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.