Connect with us

ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு எச்சரிக்கை… மத்திய அரசு கொடுத்த தகவல்…!

Latest News

ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு எச்சரிக்கை… மத்திய அரசு கொடுத்த தகவல்…!

ஆண்ட்ராய்டு செல்போன்கள் பயன்படுத்துபவர்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்பிருப்பதாக மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்து இருக்கின்றது.

ஆண்ட்ராய்டு ஓ எஸ் 12, 12 எல், 13 மற்றும் 14 ஆகியவற்றை பயன்படுத்துபவர்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்பிருப்பதாக மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்திய கணினி அவசரகால பதில் குழு எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. பயனாளர்களின் முக்கியமான தகவல்களை பெறுவதற்கு இந்த தாக்குதலை நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கட்டமைப்பு சிஸ்டம், கூகுள் பிளே, சிஸ்டம் அப்டேட் ஆகியவற்றில் உள்ள குறைபாடு காரணமாக இந்த தாக்குதலுக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஒரிஜினல் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து கிடைக்கும் பொருத்தமான அப்டேட்களை புதுப்பிக்கும்படியும் கேட்டுக் கொண்டப்பட்டுள்ளது. கிடைக்கும் பாதுகாப்பு அப்டேட்களை இன்ஸ்டால் செய்யும் அனைத்து ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு இந்த பாதுகாப்பு அப்டேட்ஸ் கிடைக்கவில்லை என்றால் பயனர்கள் நம்பிக்கை இல்லா செயலிகள், தெரியாத இணையதளம், சந்தேகத்திற்குரிய லிங்ஸ் ஆகியவற்றை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அப்டேட்ஸ் செய்துவிட்டால் பயனர்கள் அவர்களுடைய சாதனங்களை கடுமையான பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

More in Latest News

To Top