---Advertisement---

தமிழ்நாடு கொரோனா இல்லாத மாநிலம் – அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு !

By Sri
Published on: March 11, 2020
---Advertisement---

தற்போதைய நிலவரப்படி தமிழகம் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாநிலமாக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் முதன்முதலாக கண்டுபிடிக்க கொரோனா வைரஸ் பாதிப்பு இன்றோடு 4000 பேருக்கு மேல் காவு வாங்கியுள்ளது. மேலும் எல்லா நாடுகளுக்கும் பரவியுள்ள இந்த வைரஸ் பீதியால் உலக மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்குதல் பரவியுள்ளதாகவும் 40 பேருக்கு மேல் வைரஸ் அறிகுறி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளே கொடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் நோய் வருமுன்னே காப்பதே சிறந்தது என்பதால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தற்போது குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில்  ‘நம் மாநிலத்துக்கு ஒரு நல்ல செய்தி. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நபரின் ரத்தத்தில் தற்போது கொரோனா வைரஸ் இல்லை. அவர், இவ்வளவு வேகமாகக் குணமடைந்ததற்குக் காரணம் மிகச்சிறந்த சிகிச்சையும், மருத்துவர்களின் நிபுணத்துவமும்தான். தற்போதைய நிலவரப்படி தமிழகம் கொரோனா இல்லாத மாநிலமாக உள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.