---Advertisement---

வரும் 15ஆம் தேதி… 1000 இடங்களில் மருத்துவ முகாம்… அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி…!

By Sri
Published on: October 8, 2024
---Advertisement---

தமிழகத்தில் வரும் 15ஆம் தேதி 1000 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருக்கின்றார்.

சென்னை சைதாப்பேட்டை தொழிலாளர் காலணியில் இன்று மருத்துவ முகாமை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் பேசி அவர் தெரிவித்ததாவது ‘வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தமிழக சுகாதாரத்துறை தயார் நிலையில் இருக்கின்றது. தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறோம்.

15 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடைபெற இருக்கின்றது. வருகிற 15ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிட்டு இருக்கின்றோம். சென்னையில் 100 இடங்களிலும், மற்ற மாவட்டங்களில் 900 இடங்களிலும் இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளது. முதலமைச்சர் தொடங்கி வைக்கப்பட்டு மக்களை தேடி மருத்துவம் மூலம் ஒரு கோடி பெயரை சென்றடைவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால் தற்போது இரண்டு கோடி பேர் வரையில் பயனடைந்து இருக்கிறார்கள். இதுவரை ஒரு கோடியே 96 லட்சத்து 77 ஆயிரத்து 577 பேர் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் ஐநா சபையின் பாராட்டையும் நாம் பெற்றுள்ளோம். இதனை தடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை பொதுமக்களும் வழங்க வேண்டும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் டெங்கு உயிரிழப்புகள் குறைந்து இருக்கின்றது. இந்த ஆண்டு இதுவரை 7 பேர் பலியாகி இருக்கிறார்கள். தங்களது வீடுகளின் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காாமல் மக்கள் பாதுகாத்துக் கொண்டால் கொசு உற்பத்தியை தடுத்துவிடலாம். பொதுமக்கள் இதில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்’ என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

சர்தார் 2 பட விழாவில் பேசிய நடிகர் கார்த்தி மற்றும் மாலவிகா மோகனன்.

Karthi Faces Severe Backlash: ‘மாலவிகாவை அப்படி எதிர்பார்த்தேன்’ – மோனிகா பெல்லூச்சி ஒப்பீட்டால் இணையத்தில் வெடித்த விவாதம்!

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!