---Advertisement---

உடல் உறுப்பு தானம் செய்ய முதல்வர் பதிவு… அமைச்சர் மா சுப்பிரமணியன் சொன்ன தகவல்..!

By Sri
Published on: September 24, 2024
---Advertisement---

உடல் உறுப்பு தானம் செய்வதற்கு முதலமைச்சர் பதிவு செய்திருப்பதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்து இருக்கின்றார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் உறுப்பு தான நிகழ்ச்சி நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் உடல் உறுப்பு மாற்று விழிப்புணர்வு கையேடு மற்றும் மறுபிறவி என்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு குறித்து குறுந்தகட்டினை வெளியிட்டார்கள்.

இந்த நிகழ்ச்சியின் உறுப்பு கொடையாளர்கள் குடும்பத்தினருக்கு கௌரவம் செய்யப்பட்டு உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம்பேசிய மா. சுப்பிரமணியன் கூறியதாவது ‘உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை 1998 உறுப்புக்கொடையாளர்கள் உருவாகி இருக்கின்றார்கள்.

இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு கொடையாளர்களின் மூலம் பெறப்பட்ட இதயம் 892, நுரையீரல் 912, கல்லீரல் 1794 , சிறுநீரகம் 3544, சிறுகுடல் 15, வயிறு 1, கை 7,  கணையம் 42 என 7,207 முக்கிய உறுப்புகள் பயன்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. முதல்வர் மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு 2021 முதல் தற்போது வரை 585 பேர் உடல் உறுப்பு தானம் செய்திருக்கிறார்கள்.

மு க ஸ்டாலின் மியாட் மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்திருக்கின்றார் என்று தெரிவித்து இருக்கின்றார். ஒவ்வொருவரும் தங்களது உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதற்கு பதிவு செய்ய வேண்டும் என்று அவர் அந்த நிகழ்ச்சியில் கூறி இருந்தார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Super Good Films officially announces the theatrical re-release of evergreen classic hit movie Thulladha Manamum Thullum starring Vijay and Simran.

90ஸ் கிட்ஸ்களின் எவர்கிரீன் காவியம்…. மீண்டும் தியேட்டருக்கு வருது தற்போதே கொண்டாட்டத்திற்கு ரெடியான ரசிகர்கள்!!

South Indian actor Dulquer Salmaan launching the first single track Sigma Style from the movie SIGMA today evening.

இன்னைக்கு சாயங்காலம் செம ட்ரீட் இருக்கு…. சிக்மா படத்தோட ஃபர்ஸ்ட் சிங்கிளை ரிலீஸ் செய்யப்போகும் முன்னணி ஸ்டார்!

Bollywood actress Janhvi Kapoor visiting Tirumala Tirupati temple seeking Lord Balaji blessings and celebrating the success response of her movie Peddi.

திருப்பதி ஏழுமலையான் பாதத்தில் ஜான்வி கபூர்! பெத்தி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்காக உருகிய நடிகை!!

Actress Trisha Krishnan thanking Upasana Konidela on Instagram for sending a special hamper filled with traditional homemade Telugu food and pickles.

மெகா குடும்பத்தில் இருந்து வந்த சர்ப்ரைஸ் பாக்ஸ்; நள்ளிரவில் உருகிய நடிகை திரிஷா.. பின்னணியில் இருக்கும் சுவாரசிய சங்கதி!

Tamil actor and director Parthiban presenting a special handwritten poem letter to Tamil Nadu CM Vijay during their recent official meeting

தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த பார்த்திபன் காகிதத்தில் எழுதிய அந்த வார்த்தைகள் என்ன தெரியுமா?

Heartin movie romantic melody song Oru Nodi sung by Anand Aravindakshan and composed by Rajesh Murugesan releasing today at 5 PM.

மெலடி கிங் ராஜேஷ் முருகேசன் மியூசிக்ல இன்னைக்கு ஒரு மரண வெயிட்டிங் லவ் சாங் வருது… டைம் நோட் பண்ணிக்கோங்க பாஸ்!