---Advertisement---

விஜய் பிறந்தநாளுக்கு வராத மாஸ்டர்! மீண்டும் தேதியில் மாற்றம்!

By Sri
Published on: April 29, 2020
---Advertisement---

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இன்னும் 6 மாதங்கள் கழித்து தீபாவளிக்குதான் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் கடந்த மாதம் நடந்தது. இந்நிலையில் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக வேண்டிய திரைப்படம் கொரோனா ஊரடங்குக் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த படத்தின் டிரைலராவது வெளியாகுமா என விஜய் ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர். மாஸ்டர் திரைப்படம் முதல் முறையாக 5 மொழிகளில் வெளியாக இருப்பதாக ஐனாக்ஸ் நிறுவனம் தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் திரைப்படம் விஜய்யின் பிறந்தநாளான  ஜுன் 22 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஊரடங்கு இப்போது முடியாத சூழ்நிலை நிலவுவதால் அந்த தேதியில் படத்தை ரிலீஸ் செய்வது கடினம் என்பதால் ரிலீஸ் தேதியை மீண்டும் தள்ளி வைத்துள்ளனர்.

தற்போதைய நிலையின் படி மாஸ்டர் திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ஏழு மாத தாமதத்தால் தயாரிப்பாளருக்கு பல கோடி ரூபாய் வட்டி கட்ட வேண்டிய சூழல் உருவாகி லாபத்தில் ஒரு மிகப்பெரிய தொகை குறைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  The Lion Rules Alone! — "நரிகள் இருக்கலாம்.. ஆனால் சிங்கம் ஒன்றுதான்!" — முதல்வர் விஜய்க்கு மன்சூர் அலிகான் கொடுத்த மாஸ் சப்போர்ட்!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing Sundar C's confirmation of Vishal's Purushan release date for Pongal 2027.

பொங்கல் 2027 ரேஸில் விஷாலின் ‘புருஷன்’! சுந்தர் சி கொடுத்த அதிகாரப்பூர்வ மாஸ் அப்டேட்!

Editorial visual announcing the 8-minute promo premiere for Vetrimaaran and Silambarasan TR's Arasan.

‘வடசென்னை’ உலகத்தில் ‘அரசன்’! 8 நிமிட ப்ரோமோ ரெடி… மாஸ் முடிவெடுத்த வெற்றிமாறன் – சிலம்பரசன் டிஆர்!

Editorial visual announcing the official launch and filming of Tamizh Padam 3: Alien Athiyayam.

“அகில உலக சூப்பர் ஸ்டார்” சிவாவின் ‘தமிழ் படம் 3: ஏலியன் அத்தியாயம்’ – ஷூட்டிங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம்!

Editorial visual capturing producer Kalaipuli S. Thanu recalling the inception of Suriya's Kaakha Kaakha.

அத்தனை நிறுவனங்களும் வேண்டாம் சொன்ன கதை… கெளதம் மேனனை தூக்கி நிறுத்திய தாணு: ‘காக்க காக்க’ படத்தின் சீக்ரெட் ரிவீல்!

Editorial visual illustrating director Perarasu recalling the Thirupaachi screenplay incident.

“இதுதான் சிறந்த திரைக்கதை!” – விஜய்யின் ‘திருப்பாச்சி’ பட ரிலீஸ் இரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் பகிர்ந்த பேரரசு!

Editorial visual announcing the first single '#AdraParama' and release date for Raawadi.

பசில் ஜோசப் – அக்‌ஷய் குமார் இணையும் ‘ராவடி’ படத்தின் முதல் பாடல் அப்டேட்! கிறிஸ்மஸ் ரிலீஸ் தேதி வெளியீடு!