தமிழகத்தை சேர்ந்தவர் இல. கணேசன். இவர் நீண்ட நாட்களாக தமிழக பாஜகவின் தலைவராக ஒரு காலத்தில் இருந்தவர். தமிழக மற்றும் தேசிய அளவில் பாரதிய ஜனதாவில் பல்வேறு பதவிகளை வகித்தவர்.
இவரை தற்போது மாநில ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது.
மணிப்பூர் மாநில ஆளுநராக மத்திய அரசு இவரை நியமித்துள்ளது.
இவர் நேற்று மணிப்பூர் ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டார். இதில் தமிழக பாஜக தலைவர் ஹெச்.ராஜா உட்பட பல மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மரியாதைக்குரிய திரு.இல.கணேசன் ஜி அவர்கள் மணிப்பூர் மாநில ஆளுநராக பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது.@blsanthosh @NBirenSingh @annamalai_k pic.twitter.com/0ezVMiIQbV
— H Raja (@HRajaBJP) August 27, 2021







