மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி சக்கரபாணி.இவரின் மகள் லீலாவதி இவர் தனது சித்தப்பா எம்.ஜி.ஆருக்கு கிட்னி பாதிக்கப்பட்டபோது தனது கிட்னியை கொடுத்து உதவினார். கேரளாவில் இருந்த லீலாவதி செய்திகளை நாளிதல்கள் மூலம் தெரிந்து எம்.ஜி.ஆருக்கு கிட்னி தானம் செய்து இருந்தார். இவருக்கு திருமணமாகி இருந்த நிலையிலும் கணவரின் ஒப்புதலுடன் கிட்னி தானம் செய்திருந்தார்.
தனக்கு கிட்னி தானம் செய்தவர் லீலாவதிதான் என எம்.ஜி.ஆருக்கு வலம்புரி ஜான் மூலம் தாமதமாக தான் தெரிந்ததாம் பின்பு அவரை அழைத்து கண்ணீர் மல்க நன்றி சொன்னாராம்.
இவ்வளவு பெரும் தியாகம் செய்த லீலாவதி , இன்று சென்னையில் அதிகாலை 2 மணி அளவில் இயற்கை எய்தினார்.













