Latest News
காதலியை சந்திக்க புது ரூட்… சினிமா பட பாணியில் இளைஞர் செய்த செயல்… வைரலாகும் வீடியோ…!
உத்திரபிரதேச மாநிலத்தில் தனது காதலியை சந்திக்க இளைஞர் ஒருவர் பர்தா அணிந்து வந்த வினோத சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
உத்தரதேச மாநிலம் மொரதாபாத்தில் பட்ட பகலில் இந்த சம்பவம் நடந்திருக்கின்றது. அந்த நபர் சந்த் புரா என தெரிய வந்திருக்கின்றது. அவர் தனது காதலியை சந்திக்க பர்தா அணிந்து வந்திருக்கின்றார். அவரது நடத்தையில் அந்த பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு சிலர் அவரை திருடன் எனவும், மற்றொருவர்கள் குழந்தை திருடன் என்று எண்ணி பர்தாவை கழட்ட கூறி இருக்கிறார்கள்.
பர்தா அணிந்து பெண் வேடத்தில் ஆண் ஒருவர் இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தன. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. அவரிடமிருந்து துப்பாக்கி சிக்கியதாகவும் கூறப்படுகின்றது. அந்த கும்பல் அந்த இளைஞர்களிடம் ஆதார் அட்டையை காட்டுமாறு தெரிவித்திருக்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் சிறை பிடித்து வைத்திருக்கின்றனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞரை கைது செய்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலியை சந்திக்க பர்தா அணிந்து வந்த இளைஞன் மக்களிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகின்றது.
A young man named Chand Bhura reached Moradabad district of Uttar Pradesh wearing a burqa to meet his girlfriend.
People got suspicious and caught him.
A lighter pistol was also found during the search.
Then he was beaten up& sent to The police
Indian Railway Terrorists pic.twitter.com/9YJUQF0agx
— Ravi Raj Kishor (@RaviRajKishorr) September 2, 2024