---Advertisement---

கொரோனா பலி மற்றும் பாதிப்பு! கடந்த 24 மணிநேர அப்டேட் !

By Sri
Published on: April 14, 2020
---Advertisement---

கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலி ஆனவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.  இந்நிலையில் உலக அளவில் இதுவரை, 19, 20,918 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,453289 பேர் குணமடைந்துள்ளனர். சுமார் 119686 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாலில் , இதுவரை 10,363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1036 பேர் குணமடைந்துள்ள நிலையில், 339 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1,211 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர் மற்றும் ஒரே நாளில் 117 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்   தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனாவால் இந்திய பலி எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஊரடங்கு இன்னும் 20 நாளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க