---Advertisement---

மது கிடைக்காமல் நடக்கு தற்கொலை – கேரள அரசு அதிரடி அறிவிப்பு !

By Sri
Published on: March 30, 2020
---Advertisement---

கேரளாவில் ஊரடங்கால் மது கிடைக்காததால் 7 பேர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அங்கு மருத்துவர் சீட்டோடு வந்தால் அவர்களுக்கு மது வழங்கலாம் என அம்மாநில அரச்சாங்கம் அறிவித்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6,00 ,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், எண்ணிக்கை குறைவாக உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் நாடெங்கும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த 5 நாட்களாக மது கிடைக்காத மன உளைச்சலில் கேரளாவில் மது கிடைக்காததால் 7 பேர் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். இதே போல தமிழகத்திலும் 5 பேர் வரை தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இதனையடுத்து கேரள முதல்வர் மருத்துவரின் பரிந்துரை சீட்டுடன் வருபவர்களுக்கு மதுபானங்களை வழங்க உத்தரவிட்டார். ஆனால் இதற்கு இந்திய மருத்துவக் கவுன்சில் தடைபோட்டுள்ளது. அதுபோல கேரள மருத்துவர்களிடம் யாருக்கும் மதுவை பரிந்துரைக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.