செல்ஃபோன்களின் வரவுக்கு பின்னர் பேருந்தில் டிரைவர் பாட்டு போடும் வேலை மிச்சமாகிவிட்டது. சைனா போன்கள் வந்த காலத்தில் இருந்து பஸ்ஸில் ஏறுபவர்கள் ஆளுக்கு ஒரு பாடலை தனது செல்ஃபோனில் அலறவிட்டு கொல்கிறார்கள் இது அடுத்தவருக்கு எரிச்சலை தரும் என அவர்கள் நினைப்பதில்லை.
இதை கருத்தில் கொண்ட கர்நாடகாவை சேர்ந்த
நபர் ஒருவர் பேருந்தில் பயணிக்கும் போது, சத்தமாக பாட்டுக் கேட்கவும், வீடியோ பார்க்கவும் தடை விதிக்கக் கோரி, கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு, கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், பேருந்தில் பயணம் செய்யும் போது, மொபைல் போன் ஸ்பீக்கரில், அதிக சத்தம் வைத்து பாட்டு, வீடியோக்கள் பார்ப்பவர்களை, சக பயணிகளுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என பேருந்து நடத்துனர், ஓட்டுனர் அறிவுறுத்த வேண்டும். இந்த அறிவுறுத்தலை மீறும் பயணியை பேருந்து ஊழியர்கள் தாராளமாக பேருந்தை விட்டு இறக்கிவிடலாம் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.







