---Advertisement---

உடல் நிலையில் முன்னேற்றம்?…கள்ளக்குறிச்சியில் குறைந்து வரும் பதட்டம்…

Published on: June 25, 2024
kallakurichi
---Advertisement---

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவச்சேரி பகுதிகள் தான் கடந்த சில நாட்களாகவே அதிக கவனம் பெற்றிருக்கிறது. தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த விஷசாராய விவகாரத்தில் பலி எண்ணிக்கை 59ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் தொடர்ந்து பலருக்கும் சிகீட்சை வழங்கப்பட்து வருகிறது.

விஷசாராய உயிரிழப்பை அடுத்து அந்த பகுதிகளில் மரண ஓலங்களே ஒலித்து வந்தது. இப்போது அங்கேயிருந்த பதட்டமான சூழல் குறையத்துவங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

விஷசாராயம் குடித்து மருத்துவமனையில் உள் நோயாளிகளாக நூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

Kallakurichi
Kallakurichi                                                                                              இந்நிலையில் அதில் தொன்னூரு பேரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் சொல்லியிருக்கிறது.

அதே போல இதுவரை எட்டு பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்ததனால் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவத்தை அடுத்து கடந்த சில நாட்களாக இருந்த பதட்ட நிலை தற்போது லேசாக குறையத்துவங்கியுள்ளது.

அனுமதிக்கப்பட்டுள்ள உள் நோயாளிகளின் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றார்கள். இந்த விஷயத்தில் ஆளும் திமுக அரசின் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை வைத்த தமிழக எதிர்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிசாமிக்கு இன்று பேரவை கூட்டத்தொடரில் பதில் கொடுத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த துயர சம்பவம் நடந்ததுமே தமிழக அரசு மிக துரிதமாக செயல் பட்டதாகவும் சொன்னார் முதலமைச்சர்.  தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்திய இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டு சிகீட்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்பதே தொடர் பிரார்த்தனையாக இருந்து வருகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

சர்தார் 2 பட விழாவில் பேசிய நடிகர் கார்த்தி மற்றும் மாலவிகா மோகனன்.

Karthi Faces Severe Backlash: ‘மாலவிகாவை அப்படி எதிர்பார்த்தேன்’ – மோனிகா பெல்லூச்சி ஒப்பீட்டால் இணையத்தில் வெடித்த விவாதம்!

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!