---Advertisement---

கவர்னர் ஆர் என் ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட வாய்ப்பா…? மத்திய அரசின் முடிவு என்ன…?

By Sri
Published on: July 19, 2024
---Advertisement---

மத்திய அரசு விரும்பினால் கவர்னராக அவரே தொடர்வார் என்று கூறப்படுகின்றது.

ஒவ்வொரு மாநிலத்திலும் கவர்னராக நியமிக்கப்படுபவர்கள் ஐந்து ஆண்டு காலம் வரை அந்த பதவியில் நீடிக்கலாம். அதன்பிறகு புதிய ஒருவர் அல்லது அவருக்கே பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் அல்லது மத்திய அரசு விரும்பும் பட்சத்தில் மீண்டும் கவர்னராக ஏற்கனவே இருந்தவர் நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் ஆளுநர் ரவியின் பதவிக்காலம் இந்த மாதம் 31ஆம் தேதியுடன் நிறைவடைகின்றது. தற்போது டெல்லி சென்று இருந்த கவர்னர் ரவி, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து பேசி இருக்கிறார். ஏற்கனவே அவருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.

அதேபோல் கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கானின் பதவிக்காலமும் விரைவில் முடிவடையுள்ளது. ஏற்கனவே ஜார்கண்ட் கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் தற்போது காலியாக உள்ள தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை கவர்னர் ஆகிய பதிவுகளை கூடுதலாக கவனித்து வருகின்றார். மேலும் வேறு சில மாநில கவர்னர்களின் பதிவை காலம் முடிவடைய உள்ளதாக கூறப்படுகின்றது.

இதனால் தமிழகம், கேரளா, தெலுங்கு உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்கலாமா? என்பது குறித்து தொடர்ந்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகின்றது. தமிழக கவர்னர் ஆர் என் ரவி டெல்லி சென்றிருந்த நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்திக்க முயற்சி செய்திருக்கின்றார். ஆனால் அது நடக்கவில்லை. இதனால் அவருக்கு பதவிக்காலம் நீட்டிப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. டெல்லி சென்ற ஆளுநர் நேற்று இரவு சென்னை திரும்பி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.