---Advertisement---

இரண்டு லட்சம் பேரை பாதித்த காய்ச்சல்…கலங்கத்தில் நிற்கும் கேரளா?…

Published on: June 29, 2024
fever hospital
---Advertisement---

கேரளாவில் கடந்த மாத கடைசியிலிருந்து மழை பெய்யத் துவங்கியது. அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சில நேரங்களில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. மழையின் தாக்கம் ஒரு பக்கம் இருந்து வர தொற்று நோய்களின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறார்கள் கேரள மாநில மக்கள்.

எலிக்காய்ச்சல், பறவை காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் என பல விதமான தொற்றுக்களால் பாதிக்கப்பட்ட கேரள மக்களை தற்போது மிரட்டி வருவது நைல் காய்ச்சல். இதன் தாக்கம் மழை பெய்யத் துவங்கியதிலிருந்தே அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. மழை அதிகரிக்கும் பட்சத்தில் இதன் தாக்குதல் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.

fever
fever

இந்த ஜூன் மாதத்தில் மட்டும் எலிக்காய்ச்சலுக்கு பதினெட்டு பேரும், மஞ்சள் காமாலைக்கு ஐந்து பேரும், டெங்கு காய்ச்சலுக்கு மூன்று பேரும், எச் ஒன் என் ஒன் தொற்றிற்கு மூன்று பேரும் இதுவரை பலியாகி உள்ளதாக பிரபல தமிழ் மாலை நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. பல்வேறு வகையான காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை இரண்டு லட்சத்து பதினெட்டாயிரமாக இருப்பதாகவும் இந்த செய்தி சொல்லியுள்ளது.

கேரளாவின் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், க்ளீனிக்களுக்கு  நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகீட்சைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள அதிகரித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

 

தென் மேற்கு பருவ மழை துவங்கும் முன்னரே ஒரு சில நோய்களின் தாக்கம் இருந்து வந்தது, மழையின் தீவிரத்திற்கு பிறகு நோய் பரவிலின் தீவிரம் அதிகரித்து விட்டது. இதனை தடுக்க சுகாதாரத்துறை தீவிரம் காட்டி வருகிறத கேரளாவில்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

மறைந்த புகழ்பெற்ற இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் அவர்களின் நினைவஞ்சலிப் போஸ்டர்.

பிரபல இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் காலமானார்: இந்திய சினிமா உலகினர் கண்ணீர் அஞ்சலி!

Official trailer release announcement visual for Superstar Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு: அக்டோபர் 5 முதல் உலகமெங்கும் வெளியீடு!

ஏஐ மார்பிங் மற்றும் டீப்ஃபேக் விவகாரம் குறித்து நடிகர் ஜூனியர் என்டிஆர் கண்டனம் தெரிவித்த செய்திப் படம்.

தேவரா பட பாடல் மார்பிங் விவகாரம்: ஏஐ தொழில்நுட்ப துஷ்பிரயோகத்திற்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கடும் கண்டனம்!

இசையமைப்பாளர் டி.ராஜேந்தர் மற்றும் இளையராஜா கூட்டணி குறித்துப் பேசும் செய்திப் படம்.

சுயமரியாதையை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்: இளையராஜாவை பாட வைத்தது குறித்து டி.ராஜேந்தர் சுவாரஸ்ய தகவல்!

Official announcement visual layout for the new film collaboration between director Ashwin Saravanan and Attakathi Dinesh.

மாயா, கேம் ஓவர் இயக்குநருடன் கைகோர்க்கும் அட்டகத்தி தினேஷ்: புதிய படத்தின் அதிரடி அறிவிப்பு!

Media visual highlighting Sun TV acquiring the satellite rights for Dhanush's OM.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன் டிவி!